/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மான்ஃபோர்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுமான்ஃபோர்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மான்ஃபோர்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மான்ஃபோர்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மான்ஃபோர்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 28, 2010 01:34 AM
அரியலூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பள்ளி முதல்வர் சகோதரர் ஜூலியன் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் பொதுதேர்வில், அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் தேர்வு எழுதிய 87 மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றனர். இவர்களில் சேர்ந்த மாணவி விஜயலெக்ஷ்மி 477 மதிப்பெண்கள் பெற்று, அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடமும், கல்வி மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் 450 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், 45 மாணவ, மாணவிகள் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 78 மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அல்போன்ஸ் ஹெர்மலின் நான்ஸி, காயத்ரி, சூர்யா, சங்கவி ஆகிய நான்கு மாணவ, மாணவிகளும் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடமும், அஸ்விதா லிலியன் மேத்யூ 464 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற விஜயலெக்ஷ்மி கணிதம் மற்றும் அறிவியல் முதல் தாளில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சாதனை மாணவ, மாணவிகளை மாவட்ட கலெக்டர், சி.இ.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பாராட்டினர்.